நாட்டில் 24 மணிநேரத்தில் 12 பேர் பலி! 40 பேருக்கு காயம்!!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் பலியாகியுள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் ஆறுபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதேவேளை, கடந்த 10 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மொத்தமாக 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles