தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுசாரி யோகராஜா. அனைவராலும் அன்போடு “ராஜா டிரைவர்” என அழைக்கப்பட்டவர்.
ஹொலிரூட் தோட்ட மக்களின் வாழ்க்கையோடு மூன்று தசாப்தங்களாக ஒன்றிணைந்த மனிதர். கடந்த 30 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் (Ambulance) சாரதியாக பணியாற்றி, மனித உயிர்களின் காவலனாகவே வாழ்ந்தவர் ராஜா அண்ணா.
1964 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் திகதி பிறந்த அவர், தனது 62 ஆவது வயதில் , 2026 ஜனவரி 22 ஆம் திகதி எம்மை விட்டு பிரிந்தார். ஆனால் அவர் விட்டுச் சென்ற நினைவுகளும், அவர் காத்த உயிர்களும், அவர் காட்டிய மனிதநேயமும் என்றைக்கும் அழியாதவை.
நேரம், காலம் என்றெல்லாம் அவர் ஒருபோதும் கணக்கிட்டதில்லை.
நள்ளிரவு ஆனாலும், அதிகாலை ஆனாலும்,
“ராஜா அண்ணா” என கதவைத் தட்டினால் போதும் –
ஒரு நிமிடமும் தாமதிக்காமல் ஆம்புலன்ஸை இயக்கி, நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்.
உணவு உண்ணிக் கொண்டிருந்தாலும், அதை அப்படியே விட்டு வைத்து, ஒரு உயிரைக் காப்பதையே தனது முதன்மை கடமையாக கருதியவர்.
பல கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று, பல குடும்பங்களில் சிரிப்பையும், பிள்ளைகளின் அழுகுரலையும் கேட்க வைத்தவர். அவர் ஓட்டிய ஒவ்வொரு பயணமும் – ஒரு உயிரின் நம்பிக்கையாக இருந்தது.
தனக்காக அல்ல, தமது சமூகத்துக்காகவே வாழ்ந்தவர் . அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அவர் காட்டிய மனிதநேயம் அளவிட முடியாதது.
இன்று ஹொலிரூட் தோட்டம் மட்டும் அல்ல, பல வீடுகள், பல குடும்பங்கள், ஒரு உண்மையான மனிதனை இழந்து நிற்கின்றன.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவர் செய்த சேவைகள் அவருக்கான நிரந்தர நினைவுச்சின்னமாக என்றும் நிலைத்திருக்கும்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 24.01.2026 சனிக்கிழமையன்று நடைபெற்று, தோட்ட பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
பதிவு – எஸ்.பிரதா
வட்டகொடை
தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுசாரி யோகராஜா.
அனைவராலும் அன்போடு “ராஜா டிரைவர்” என அழைக்கப்பட்டவர்.
ஹொலிரூட் தோட்ட மக்களின் வாழ்க்கையோடு மூன்று தசாப்தங்களாக ஒன்றிணைந்த மனிதர். கடந்த 30 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் (Ambulance) சாரதியாக பணியாற்றி, மனித உயிர்களின் காவலனாகவே வாழ்ந்தவர் ராஜா அண்ணா.
1964 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் திகதி பிறந்த அவர், தனது 62 ஆவது வயதில் , 2026 ஜனவரி 22 ஆம் திகதி எம்மை விட்டு பிரிந்தார். ஆனால் அவர் விட்டுச் சென்ற நினைவுகளும், அவர் காத்த உயிர்களும், அவர் காட்டிய மனிதநேயமும் என்றைக்கும் அழியாதவை.
நேரம், காலம் என்றெல்லாம் அவர் ஒருபோதும் கணக்கிட்டதில்லை.
நள்ளிரவு ஆனாலும், அதிகாலை ஆனாலும்,
“ராஜா அண்ணா” என கதவைத் தட்டினால் போதும் –
ஒரு நிமிடமும் தாமதிக்காமல் ஆம்புலன்ஸை இயக்கி, நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்.
உணவு உண்ணிக் கொண்டிருந்தாலும், அதை அப்படியே விட்டு வைத்து, ஒரு உயிரைக் காப்பதையே தனது முதன்மை கடமையாக கருதியவர்.
பல கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று,
பல குடும்பங்களில் சிரிப்பையும், பிள்ளைகளின் அழுகுரலையும் கேட்க வைத்தவர். அவர் ஓட்டிய ஒவ்வொரு பயணமும் – ஒரு உயிரின் நம்பிக்கையாக இருந்தது.
தனக்காக அல்ல, தமது சமூகத்துக்காகவே வாழ்ந்தவர் . அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.
அவர் காட்டிய மனிதநேயம் அளவிட முடியாதது.
இன்று ஹொலிரூட் தோட்டம் மட்டும் அல்ல,
பல வீடுகள், பல குடும்பங்கள், ஒரு உண்மையான மனிதனை இழந்து நிற்கின்றன.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
அவர் செய்த சேவைகள் அவருக்கான நிரந்தர நினைவுச்சின்னமாக என்றும் நிலைத்திருக்கும்.