என்.பி.பி. அரசுமீதான மக்கள் நம்பிக்கை குறையவில்லை!

மாகாணசபைத் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி   அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெளிபடும் என்பது உறுதி என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அதிகரித்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனேயே இதனை நான் அறிவிக்கின்றேன்.

மாகாணசபைத் தேர்தலின்போது இது தெரியவரும். நிச்சயம் நாம் தேர்தலை நடத்துவோம். கிழக்கு மாகாணத்திலும் வெற்றிபெறுவோம்.

மாகாணசபைத் தேர்தலுக்குரிய உரிய ஏற்பாடுகள் நடந்த பின்னர் உரிய காலத்துக்குள் அது நடத்தப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles