சிம்பாப்வே அணியின் வெற்றிநடை தொடருமா? மேற்கிந்திய தீவுகளுடன் இன்று மோதல்!

ICC Men’s T20 World Cup தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று (23) முக்கியமான மோதல் நடைபெறுகிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்தப் போட்டி மும்பையில் உள்ள Wankhede Stadium மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.

நடைபெற்று வரும் உலகக்கிண்ண தொடரில் சிம்பாப்வே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

முதல் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

தன்னம்பிக்கையுடன் சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ள அந்த அணி, இன்று மேலும் ஒரு பெரிய வெற்றியை குறிவைத்து களமிறங்குகிறது.

மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் அபாரமான நிலையில் உள்ளது. குழு சுற்றில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான அணியாக திகழ்கிறது. அவர்களின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் சமநிலையுடன் அமைந்துள்ளது.

அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் தீவிரமாக போராடவுள்ளதால், ரசிகர்கள் பரபரப்பான மற்றும் சுவாரஸ்யமான போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Articles

Latest Articles