ஜீவனின் கருத்துக்கு சுதந்திர தொழிலாளர் சங்கம் முழு ஆதரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வருகை கொடுப்பனவு தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமாக இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வெளியிட்ட கருத்துக்கு, சுதந்திர தொழிலாளர் சங்கம் தமது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான லெஸ்லி தேவேந்திரா, ஜீவன் தொண்டமானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதம் ஊடாகவே தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles