( இரா. சுரேஷ்குமார் – தெமோதரை நிருபர் )
பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, புதன்கிழமை (25) அதிகாலை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட பேருந்து, வெல்லவாய டிப்போவுக்குச் சேர்ந்த மொனராகலை – பண்டாரவளை சேவையில் இயங்கிய பேருந்து எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பேருந்து, வழக்கம் போல மொனராகலை இலிருந்து பண்டாரவளைக்கு வந்து, இரவு முழுவதும் பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் இன்று காலை 6.45 மணியளவில் சேவையைத் தொடங்க ஓட்டுநர் வந்தபோது, பேருந்து காணாமல் போனதை கவனித்து உடனடியாக பொலிஸில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், குறித்த பேருந்து தியதலாவ – வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










