மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணி 83 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து கடுமையாக தடுமாறியது.
எனினும், ஹோல்டர் – சைபர்ட் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க முக்கிய பங்காற்றியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 8வது விக்கெட்டுக்கு 89 ஓட்டங்கள் சேர்த்தனர்.
இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்தது.
177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதிப்படுத்தியது.










