ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ இன்று (31) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மதிப்பீடு செய்து வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் கொழும்பு வருகின்றார்.
இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதியையும் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
அவர் ரஷ்யா திரும்பிய நிலையிலேயே பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று கொழும்பு வருகின்றார்.
