கொத்மலை, கெரண்டியெல்லவில் கோர விபத்து: ஐவர் காயம்!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பொடை, கெரண்டியெல்லவில்  பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கொத் மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெளிமடை பகுதிக்கு சென்று ரம்பொடையில் உள்ள தமது வீட்டுக்கு திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே காயம் அடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கௌசல்யா.

Related Articles

Latest Articles