கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 19 ஆயிரத்து 615 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 193 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா 2ஆவது அலைமூலம் 449 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 14 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.










