தபால் சேவைகளில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெருந்தோட்டங்களில் தபால் சேவையினை வலுப்படுத்தல், புதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் (04.08.2026) பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்பில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, மலையகத்தில் சீரான தபால் விநியோகம், புதிய தபால் ஊழியர்கள் நியமனம் மற்றும் தற்போது சேவையிலுள்ள தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல், கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
