முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்!

“தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. கூட்டுப் பொறுப்பேற்று ஒட்டுமொத்த அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்த நிலக்கரி கொள்வனவு என்பது தனிப்பட்ட ஓர் அமைச்சரால் மட்டும் செய்யப்பட்டதல்ல. இது அரசால் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒரு மாபெரும் மோசடியாகும். அனுபவமற்ற, பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை வழங்கியதற்கு முழு அமைச்சரவையுமே அனுமதி வழங்கியுள்ளது.

மக்களின் வரிப்பணத்துடன் தொடர்புடைய இந்தப் பாரிய கொடுக்கல் வாங்கலில், சட்டமா அதிபரின் எவ்வித ஆலோசனையோ அல்லது அனுமதியோ பெறப்படவில்லை. இது சட்டத்தை முற்றாக மீறிய செயலாகும்.

கொண்டுவரப்பட்ட 12 கப்பல்களிலும் தரம் குறைந்த நிலக்கரியே இருந்தது. ஒப்பந்தப்படி அவற்றை நிராகரிக்க முழு அதிகாரம் இருந்தும், அரசாங்கம் வேண்டுமென்றே அதனைச் செய்யவில்லை. பயன்படுத்தப்பட்ட ஆய்வுகூடத்திற்குக் கூட எவ்விதத் தகுதியும் இருக்கவில்லை.

இந்த நிலக்கரி மோசடியானது கடந்த கால மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விட மூன்று மடங்கு பெரியதாகும். இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒரு கருவி மாத்திரமே. ஒட்டுமொத்த அமைச்சரவையும் இதற்குப் பின்னணியில் இருந்துள்ளது. அமைச்சரவைக்கு என ஒரு கூட்டுப் பொறுப்பு உள்ளது என்பதை உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.” – என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் பதவி விலகுவதுடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது என்று தெரிவித்த பீரிஸ், நாட்டு மக்களுக்கும் சட்டத்துக்கும் மதிப்பளித்து முழு அரசும் பதவி விலக வேண்டும் எனவும், தவறினால் எதிர்கால அரசு ஒன்றின் ஊடாக இதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles