37 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.

குறித்த போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான தொடக்கத்தைத் தந்தார்.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சை விளாசிய அவர், வெறும் 36 பந்துகளில் சதம் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார்.

மொத்தம் 37 பந்துகளைச் சந்தித்த அவர், 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்களைக் குவித்தார்.

இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 229 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது.

இஷான் கிஷன் 31 பந்துகளில் 74 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 57 ஓட்டங்களும் விளாசினர்.

இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles