“பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை.” என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரெசா தலாய் நிக் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுக்கு ஈரான் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரெசா தலாய் நிக் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை.
தனது சட்டவிரோத, பகுத்தறிவற்ற கோரிக்கைகளை கைவிட வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்கும்” என தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள், உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.










