மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

செ.தி.பெருமாள்

மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 86 வயதுடைய சுப்பிரமணியம் லெட்சுமி என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹட்டன் நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், மரணப் பரிசோதனைகளுக்காக சடலம் கிளங்கன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles