“மே தினத்துக்கு உருட்டு, பிரட்டு, திருட்டு என சஜித் அணி பெயரிட்டுள்ளது. அது சரியானதுதான். ஏனெனில் அவர்களுக்கு உருட்டும், பிரட்டும், திருட்டும் கைவந்தக்கலை.” – என்று இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
அத்துடன், மலையக மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை எமது ஆட்சியின்கீழ் நிச்சயம் வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
