நீதிகோரி ஹட்டனில் ‘நாம் நீலகாமம்’ போராட்டம்!

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் ஹட்டனில் தற்போது “நாம் நீலகாமம்” அறவழி போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

நாம் மலையகம் அமைப்பின் பிரதிநிதிகள், மலையக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள், இளைஞர்கள் என பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் உறுதியாக வலிறுயுத்தப்பட்டது.

நீலகாமம் மக்களுக்கு நீதி வேண்டும் எனவும், தோட்டப்பகுதிகளுக்கு கூலிப்படை அவசியம் இல்லை எனவும் இடித்துரைக்கப்பட்டது.

Related Articles

Latest Articles