சொந்த தொகுதியில் ஸ்டாலின் தோல்வி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

இறுதி முடிவுகளின்படி, கடந்த மூன்று முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மு.க.ஸ்டாலின், இம்முறை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஸ்டாலினின் தோல்வி திமுகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் தவெக 109 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

Related Articles

Latest Articles