பசறை மாவட்ட வைத்தியசாலை வீதி கடும் சேதம்: நோயாளிகள் அவதி!

பசறை மாவட்ட வைத்தியசாலை வீதி கடும் சேதம்: நோயாளிகள் அவதி!

பசறை, R.T.

பசறை மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான வீதி சேதமடைந்து காணப்படுவதால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வைத்தியசாலைக்குச் செல்லும் வீதியின் சுமார் 75 மீட்டர் தூரம் குன்றும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் இப்பகுதியைப் பயன்படுத்தும் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் பின்வருமாறு:

வீதி சீரற்ற நிலையில் உள்ளதால், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் (Ambulance) வாகனங்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வைத்தியசாலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதே வீதியினூடாகவே பசறை கெமுனு மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்ல வேண்டியுள்ளது.

அத்துடன், பசறை பிரதேச சபைக்குச் சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் செல்லும் வழியும் இதுவே என்பதால், அத்தியாவசியத் தேவைக்காகச் செல்வோர் பெரும் சிரமப்படுகின்றனர்.

நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் காணப்படும் இவ்வீதியால் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி, சேதமடைந்துள்ள வீதிப் பகுதியை விரைவாகச் சீரமைத்துக் கொடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles