தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே, தவெகவின் பலம் 107 ஆக குறையும்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் தவெகவுக்கு கூடுதலாக குறைந்தது 12 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இதன் காரணமாக, 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தவெக தலைவர் விஜய் கோரியிருந்ததாகக் கூறப்பட்டது.
து தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” தவெகவின் கோரிக்கையை ஏற்று அக்கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை அளிப்பது என முடிவெடுத்துள்ளது.
இந்த ஆதரவு, நிபந்தனையுடன் கூடியது. மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் தனது ஆதரவை தவெகவுக்கு அளிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.










