தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை: மலையக எம்.பிக்கள் மௌனம்!

“மலையக மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பாதது ஏன்.” என்று நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி எதிர்கட்சியில் இருக்கும் உறுப்பினர்களும் இந்த அடக்கு முறைக்கு எதிராக எந்தவித நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ அனுர அலையில் வந்த மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை.
அதேபோல் எதிர்கட்சி உறுப்பினர்களும் மௌனம் காத்துவருகின்றனர்.

உங்களுக்கு சந்தா பணமும் கொடுத்து, அதிகாரிகளிடம் அடியும் வாங்க வேண்டும் என்றால் எதற்கு மலையகத்தில் தொழிற்சங்கம் இயங்க வேண்டும்.” எனவும் சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

Latest Articles