கம்பளை நகரில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ!

கம்பளை நகரில் இன்று காலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்தப் பதற்றமான சூழலில், கம்பளை காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் உடனடியாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்தத் தீ விபத்திற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.

க,யோகா

Related Articles

Latest Articles