பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க அஞ்சல் நிலையங்களைப் பாதுகாத்து, அவற்றை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் விசேட நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இப்புனரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற தபால் நிலையத்தின் மறுசீரமைப்புத் திறப்பு விழாவில், அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார (Ruwan Sathkumara), உப அஞ்சல் மா அதிபர், பிராந்திய அஞ்சல் மா அதிபர் மற்றும் பொகவந்தலாவை அஞ்சல் அதிபர் விஜேபிரசன்னா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் பொகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அஞ்சல் அலுவலகப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள இந்த அஞ்சல் அலுவலகம் மூலம், இப்பகுதி மக்களுக்கு இன்னும் விரைவான மற்றும் மேம்பட்ட அஞ்சல் சேவைகளை வழங்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles