மாகாணசபைத் தேர்தல்: உறுதிமொழியை மீறிவிட்டது என்பிபி அரசு!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ரில்வின் சில்வாவின் கருத்து முறையற்றது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்வாறு கூறினார். இது தொடர்பில் மனோ கணேசன் கூறியவை வருமாறு ,

” 2025 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தார்.

2025 முடியாது 2026 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதாக பின்னர் குறிப்பிட்டார்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற நிலையில் மக்கள விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வடக்குக்குச் சென்று இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்தப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு என்றால் மாகாணசபைத் தேர்தல் கடந்த ஆண்டும் இல்லை, இந்த ஆண்டும் இல்லை. மாகாணசபைத் தேர்தலை ஒருவருட காலத்துக்குள் நடத்துவதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். தேர்தலை நடத்துவதற்கான எவ்விதமான அறிகுறியும் அங்கு தென்படுவதில்லை. ” என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles