மதுபோதையில் பஸ் செலுத்திய சாரதி கம்பளையில் கைது!

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சாரதி கம்பளை போக்குவரத்து காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, குறித்த சாரதி மதுபோதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டது.

பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் மிகவும் ஆபத்தான முறையில் அவர் பேருந்தைச் செலுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

குறித்த பேருந்தும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Related Articles

Latest Articles