தலவாக்கலையில் விபத்து: பெண் படுகாயம்!

தலவாக்கலை நகரில் இன்று மாலை நடைபெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பெண் பாதசாரி கடவையை கடக்க முற்பட்டவேளை, அவர்மீது ஆட்டோ மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் லிந்துலை, தங்ககலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த பெண் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கௌசல்யா

Related Articles

Latest Articles