மீண்டும் களமிறங்குவாரா ரணில்?

” ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வருவார் என நான் நம்பவில்லை.” என்று ஐதேக உறுப்பினரான , ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளார், தேசிய அரசமையவுள்ளது என்றெல்லாம் வெளியாகும் தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ரணில் விக்கிரமசிங்க அல்ல, ஏனையோர்தான் இது பற்றி கருத்து வெளியிட்டுவருகின்றனர். ஐதேக தலைவராக நாட்டில் வகிக்க வேண்டிய உச்ச பதவியை அவர் வகித்துவிட்டார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை சவாலை தான் எதிர்கொண்டதாகவும், பின்னர் மக்கள் தன்னை நிராகரித்தாகவும், தான் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேற்படி நிலைப்பாட்டிலேயே அவர் இருப்பார் என நான் நம்புகின்றேன்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் கட்சி தாவுவதை தடுக்கும் சட்டமூலத்தை நான் வரவேற்கின்றேன்.” – என்றார் ரவி கருணாநாயக்க.

Related Articles

Latest Articles