அமெரிக்காவிற்கும் , ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மூளாமல் இருக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்துகிறது.
ஈரானிடம் இருக்கும் சுமார் 440 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றும் நடவடிக்கையில் உதவத் தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் தனது முடிவை ரஷ்யா மற்றவர்கள் மீது திணிக்கவில்லை என்பதை அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் மரியா சகரோவா தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேவேளை, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில், அதன் யுரேனிய இருப்பை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்த யுரேனியக் கையிருப்பை அப்புறப்படுத்துவதே ஒரு முக்கியத் தடையாக நீடிக்கிறது.
