மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் உறைவிடப் பாடசாலை (Boarding School) ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய கென்யாவின் கில்கில் (Gilgil) பகுதியில் ‘உதுமிஷி பெண்கள் பாடசாலை’ (Utumishi Girls High School) இயங்கி வருகிறது. இந்த உறைவிடப் பாடசாலையில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவில் மாணவிகள் தங்கியிருந்த விடுதி கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூக்கத்தில் இருந்த மாணவிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும், இந்த விபத்தில் சிக்கி 16 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் 79 மாணவிகள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் ஜூலியஸ் ஒகாம்பா (Julius Ogamba) தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










