எனது கணவர் குற்றமற்றவர்: 38 வருடங்கள் நாட்டுக்காக சேவையாற்றியவர்: சுரேஷ் சலேவின் மனைவி உருக்கம்

“எனது கணவர் அப்பாவி, இந்நாட்டுக்காக 38 வருடங்கள் சேவையாற்றியவர். எனவே, அவருக்காக நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே தெரிவித்தார்.

சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கணவரை நேற்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சுரேஷ் சலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அதனை நிறுத்துவதற்கு நாம் முற்பட்டோம். ஆனால் தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக உள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக போராடுகின்றார். அவரிடம் விசாரணை நடத்தப்படலாம். ஆனால் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்ளக்கூடாது. அவர் ஓர் அப்பாவி. எனவே, அவர் நடத்தப்படும்விதம் பெரும் அநீதியாகும்.

38 வருடங்களாக நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். நாட்டுக்காக உயிர் துறக்க துணிந்தவர். முதுகெலும்புடன் செயல்பட்டவர்.

எனவே, அநீதிக்கு எதிராக அவர் நிச்சயம் போராடுவார்.
எனவே, அவரை குறைந்தபட்சம் வைத்தியசாலையிலாவது சேர்க்க வேண்டும். எனது கணவரை மீட்க வேண்டும்.

நாட்டுக்காக சேவையாற்றிய அவருக்காக அனைவரும்குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. சுரேசுக்காக மக்கள் முன்னிலையாக வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். ” – என்றார்.

Related Articles

Latest Articles