ஈரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக ஈரான் வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பொருளற்றதாக மாற்றிவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இச்செயல் சர்வதேச விதிகளை மீறிய ஒரு குற்றவியல் நடவடிக்கை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சு
சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இத்தாக்குதல்களால் ஏற்படப்போகும் மிக மோசமான விளைவுகளுக்கு அமெரிக்கத் தலைவர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.










