அன்று தேர்தலை ஒத்திவைத்ததால்தான் மக்கள் எங்களை வீட்டுக்கு அனுப்பினர்!

மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாத காரணத்தாலேயே கடந்த காலங்களில் மக்கள் எம்மை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்றும், எனவே கடந்த காலத் தவறுகளில் இருந்து தற்போதைய அரசு பாடம் கற்றுக்கொள்வது அவசியம் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகவும், கூட்டு எதிரணி சார்பிலும் நாம் தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். ‘உங்களது ஆட்சிக்காலத்திலும் தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லையா?’ என எம்மைக் பார்த்துச் சிலர் கேள்வி எழுப்பலாம். ஆம், அன்று நாம் தேர்தலை ஒத்திவைத்தது முற்றிலும் தவறுதான்.

அதற்கான தகுந்த பதிலைத்தான் மக்கள் அடுத்த வந்த தேர்தல் ஊடாக எமக்கு வழங்கினார்கள். தேர்தலை நடத்தத் தவறிய எமது கட்சியை நிராகரித்த மக்கள், தேர்தலை முறையாக நடத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய தரப்பினரை ஆதரித்தனர்.

எனவே, தேர்தல் ஒத்திவைப்புத் தொடர்பில் கடந்த கால வரலாற்றில் இருந்து அரசு பாடங்களைக் கற்றுக்கொண்டால் நல்லது. எமது தரப்பு எப்போதும் மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles