“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. இந்த அரசாங்கம்மீது மக்கள் அதிருப்தியில் இல்லை.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஜனாதிபதி தேர்தல் உடனே நடக்காது. பலர் தற்போதே வேட்பாளர்களாவதற்க குவிந்துள்ளனர். எனக்க அவ்வாறான திட்டம் இல்லை. மறுபுறத்தில் இந்த அரசாங்கம்மீது மக்கள் அதிருப்தி நிலையிலும் இல்லை.
யார் வேண்டுமானாலும் அரசாங்கத்தை வீழ்த்தலாம். எனவே, பொறுப்பேற்பதற்கு தகுதியானவர்கள் இருக்க வேண்டும். கடந்தகாலங்களில் நாட்டை வீழ்தியவர்களிடம் ஒப்படைக்க முடியுமா?
நடக்ககூட முடியாத நிலையில் உள்ளவர்கள் அரசியல் செய்ய முற்படுகின்றனர். ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி, வீட்டில் இருந்து கடைசிகாலத்திலாவது புண்ணியத்தை தேடிக்கொள்ள வேண்டும்.” – என்றார்.










