கண்டியில் தோட்டங்கள் விற்பனை: எதிர்த்து போராட வேலுகுமார் அறைகூவல்!

“ தேசிய வளங்களை பாதுகாப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று, கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டங்களை விற்கின்றனர். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்.”

இவ்வாறு கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிரணியின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ எமது நாட்டை பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காக எமது எதிரணி தலைவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். இந்த சமருக்கு கண்டி மண்ணில் இருந்து நாமும் எமது ஆதரவை வழங்க வேண்டும்.

டித்வா சூறாவளியால் எமது கண்டி மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் மீள் கட்டுமானப் பணிகள் இன்னும் ஆரம்பமாகவில்லை. எனவே, இந்த ஆட்சியாளர்களால் முடியாது என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

தேசிய வளங்களைப் பாதுகாப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், கண்டி மாவட்டத்தில் தோட்டங்கள் ஏலம்போட்டு விற்பனை செய்துவருகின்றனர்.

காணி மட்டும் அல்ல தொழிற்சாலைகள், பங்களாக்களும் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே, நாம் இதற்கு எதிராக போராட வேண்டும்.

எனவே, அடுத்து வரும் சில மாதங்களில் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு விரட்டியடித்து, இந்நாட்டுக்கு சுபீட்சமான அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்.

கண்டி மாவட்ட தமிழ் பேசும் பிரதிநிதிகள் எனக் கூறிச்சென்ற அரசாங்கத்தில் உள்ள பிரதிநிதிகள் தற்போது எங்கே என்று தெரியவில்லை.

மக்கள் ஏன் தமக்கு வாக்களித்து அனுப்பினார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஒன்றுமே புரியவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” – என்றார் வேலுகுமார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles