உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தான் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்ககோரி , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாகவே இந்த மனுவை கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர், மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏற்கனவே மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவே மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










