கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் முடிவுக்கு வரவிருப்பதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

இரு தரப்புக்கும் இடையே எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

போர்ச்சூழலால் கச்சா எண்ணெய் விலை முன்னதாக மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்தாலும், தற்போது எற்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள் சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

எனினும், கடற்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதிலும் கப்பல் போக்குவரத்தை சீரமைப்பதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் இயல்புநிலை திரும்ப பல வாரங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனின் (PVM Oil Associates) நிறுவனத்தின் ஆய்வாளர் Tamas Varga தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

“தற்போதைய நிலைமை நம்பிக்கையளிப்பதாக உள்ளது. கடந்த நான்கு வர்த்தக நாட்களில் மட்டும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 17 டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

விநியோகத் தடைகள் குறித்த அச்சம் இப்போது விலகியிருப்பதை இது காட்டுகிறது,” என்றார்.

Related Articles

Latest Articles