நானுஓயா – பதுளை ரயில் சேவை 20 ஆம் திகதி ஆரம்பம்!

நானுஓயா முதல் பதுளை வரையிலான பயணிகள் புகையிரத சேவை எதிர்வரும் சனிக்கிழமை (20) மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மலையக புகையிரத பாதையில் நானுஓயா முதல் அம்பேவெல வரையான புகையிரத பாதையை புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதற்கமைய மலையக புகையிரத சேவையில் நானுஓயா முதல் பதுளை வரையிலான பயணிகள் புகையிரத சேவை சனிக்கிழமை மீள ஆரம்பிக்கப்படும்.

விசேட நேர அட்டவணைக்கமைய, நானுஓயா முதல் பதுளை வரையிலான பயணிகள் புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும்.

Related Articles

Latest Articles