தேயிலைத் தோட்டத்தில் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகஸ்தென்ன தோட்டத்தில், தேயிலைச் செடிகளுக்கு இடையே ஆண் ஒருவரின் சடலம் இன்று (23) காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

தேயிலை மலையில் பணிக்குச் சென்ற தோட்டத் தொழிலாளர்கள், சடலம் ஒன்றைக் கண்டு தோட்ட நிர்வாகத்திற்கும் , மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது, உயிரிழந்தவர் ஹப்புகஸ்தென்ன தோட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான ராமலிங்கம் விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருடைய மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதவான் வருகை தந்து பார்வையிட்டதுடன், ஹட்டன் தடயவியல் பொலிஸாரும் வருகை தந்து சான்றுகளைச் சேகரித்துள்ளனர்.

அதன் பின்னர், சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை (Post-mortem) நடத்தப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

– மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்-

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles