போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் “அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்” என்று ஈரானிய பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.
ஈரானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, அஜர்பைஜானில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்த இஸ்லாமாபாத் உடன்பாடு எவ்வித அழுத்தத்தாலோ அல்லது கட்டாயத்தினாலோ ஏற்பட்டது அல்ல; மாறாக, வீரமிக்க ஈரானிய தேசத்தின் சகிப்புத்தன்மை மற்றும் அதிகாரத்தின் விளைவாகவே இது சாத்தியமானது.
அதனால்தான், இந்த இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விப் பிரகடனமாக மாறியுள்ளது.”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வல்லரசு நாடான அமெரிக்கா இணக்கத்திற்கு வந்திருப்பது அந்த நாட்டின் வீழ்ச்சியை வெளிப்படுத்துவதாக ஈரான் அரசியல் ரீதியாகக் கருதுகிறது.










