முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் மகன் ரக்கித ராஜபக்ஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(25) கைது செய்யப்பட்டனர்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக்கவை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளிலிருந்து நீக்கி, வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி அவரை சாதாரண கைதியாக தடுத்து வைப்பதற்கும் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண வருசவிதான கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.










