சூரியவன்ஷிக்கு ஐசிசி கட்டுப்பாடு

இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி தனது முதலாவது சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

இத்தொடரின்போது பாதுகாப்பு காரணங்களுக்காகத் தனியான உடைமாற்றும் அறையைப் (Changing Room) பயன்படுத்த வைபவ் சூர்யவன்ஷி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை Belfast டில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் T20 போட்டியில் விளையாடுவதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த புதன்கிழமை டர்ஹாமில் (Durham) தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் அவர் பங்கேற்கிறார்.

இதற்குமுன், சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது 205 நாட்களில் (1989-ல்) அறிமுகமானதே இந்திய சாதனையாக இருந்தது.

சூர்யவன்ஷி இப்போட்டியில் களம் காண்பதன் மூலம், 1996-ல் பாகிஸ்தான் அணி 14 வயதான ஹசன் ரசாவைத் தேர்வு செய்ததற்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முழு அங்கீகாரம் பெற்ற நாடொன்றில் விளையாடும் மிக இளம் வயது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையைப் படைப்பார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர் ஐசிசி (ICC) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) நேரடிக் கண்காணிப்பில் நடப்பதால், அவர்களின் “சிறுவர் பாதுகாப்பு விதிமுறைகள்” (Safeguarding Procedures) இங்கு அமுல்படுத்தப்படுகின்றன.

இரண்டு வாரியங்களின் விதிகளின்படி, 16 வயதுக்குட்பட்ட வீரர்கள் பெரியவர்களுக்கான உடைமாற்றும் அறையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் சூர்யவன்ஷிக்குத் தனி வசதிகள் செய்து தரப்படும்.

போட்டி நடைபெறும் நேரத்தில் இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறையில் இருக்கவும், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவும் சூர்யவன்ஷிக்கு அனுமதி உண்டு. போட்டிகளுக்கு முன்னரும் பின்னரும் உடை மாற்றும் நேரங்களில் மட்டுமே இந்தத் தடை பொருந்தும்.

அவரது இளம் வயதைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொடர் முழுவதும் அவரது பெற்றோரும் அவருடன் பயணிக்க ஐசிசி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கமான விதிகளுக்குப் புறம்பாக அவர்கள் வீரர்களுடன் ஒரே ஹோட்டலில் தங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தனது 14-வது வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகையே வியக்க வைத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 38 பந்துகளில் சதம் அடித்து T20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.

சமீபத்தில் இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 11 பந்துகளில் அதிவேக அரைசதம் கடந்து (List A) உலக சாதனை படைத்ததோடு, 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து இங்கிலாந்து தொடருக்கான தனது தயார்நிலையை நிரூபித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles