மெல்போட் பிரீமியர் லீக் நாளை பிரமாண்டமாக ஆரம்பம்

உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புசல்லாவை, ‘மெல்போட் பிரீமியர் லீக் – சீசன் 03’ (Melfort Premier League – Season 03) கிரிக்கெட் தொடர் நாளையும் (ஜூன் 27), நாளை மறுதினமும் (ஜூன் 28) மிகப்பிரம்மாண்டமான முறையில் அரங்கேறவுள்ளது.

மெல்போட் நண்பர்கள் ஒன்றியத்தின் (Melfort Friends Association) சிறப்பான ஏற்பாட்டில், மெல்போட் மைதானத்தில் நடைபெறவுள்ள இத்தொடரில் 10 பலம்பொருந்திய அணிகள் சாம்பியன் பட்டத்திற்காகப் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சமரசம் இல்லாத ஆட்டத்திறனைக் கொண்ட அணிகள் மோதுவதால், போட்டிகள் அனைத்தும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அமையும் என்பது கண்கூடு! ⚡

நாளை (சனிக்கிழமை) முற்பகல் 10:30 மணியளவில், மெல்போட் நண்பர்கள் ஒன்றியத்தின் செயலாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெறவுள்ளது.

தொடக்க விழாவைத் தொடர்ந்து லீக் சுற்றுப் போட்டிகள் உடனடியாக ஆரம்பமாகும்.

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியான அரையிறுதி மற்றும் இறுதியாட்டங்கள் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து வெற்றி சாம்பியன்களுக்கான பிரம்மாண்ட பரிசளிப்பு விழாவும் நடைபெறும்.

🌹 அமரர் பேரின்பராஜின் நினைவாக…

மெல்போட் நண்பர்கள் ஒன்றியத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினரான மறைந்த அமரர் பேரின்பராஜின் நினைவைப் போற்றும் வகையில், இந்த மெல்போட் பிரீமியர் லீக் தொடரானது “பேரின்பராஜ் ஞாபகார்த்த கிண்ணமாக” (Perinbaraj Memorial Trophy) நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானத்தை அதிரவைக்கப் போகும் 10 அணிகளில், ‘பேரின்பராஜ் ஞாபகார்த்த கிண்ணத்தை’ முத்தமிடப் போவது யார்? ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!

Related Articles

Latest Articles