உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு: 500 தேயிலை கிராமங்களை உருவாக்க திட்டம்

2030 ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தி 400 மில்லியன் கிலோ வரையும், தேயிலை ஏற்றுமதி வருமானம் 2.5 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் “Ceylon Tea Village” (சிலோன் டி கிராமம்) 500 தேயிலை கிராமங்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் (24) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

– இத்திட்டத்தினால் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் கொழுந்து அறுவடையை அதிகரித்தல்,

-அவர்களின் வருமானத்தை விருத்தி செய்தல்,

– பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை உற்பத்தியை அறிமுகப்படுத்தும் கைத்தொழிலை சுற்றுலாத் திட்டத்துடன் ஒருங்கிணைத்தல்,

-நவீன மற்றும் நிலைபேறாண உற்பத்தி முறையை அறிமுகப்படுத்துதல்,

அடையாளம் காணப்பட்ட தேயிலைக் கிராமம் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் தேயிலை உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களை அமைத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் சிறிய தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களுக்கு இத்தேயிலைக் கைத்தொழிலுடன் இணைந்த சகல தரப்பினருக்கும் பிரதிபலனை வழங்குதலும், 2030 ஆம் ஆண்டாகும் போது எதிர்பார்க்கப்படும் தேசிய இலக்கை அடைவதற்கு பங்களிப்பு வழங்குதலும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சமந்த வித்யாரத்ன,

“இத் தேயிலைக் கிராமம் திட்டத்தின் கீழ் 2026 இல் 144தேயிலைக் கிராமங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அக்கிராமங்களைத் தெரிவு செய்யும் போது எவ்வித அரசியல் தலையீடுகளும் இடம்பெறவில்லை என்பதுடன், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் பரிந்துரைக்கப்பட்ட விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முறைகளின்படி தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெளிவு படுத்தினார்.

அதன்படி “Ceylon Tea Village” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 14 மாவட்டங்களையும் உள்ளடக்கியவாறு முதல் கட்டத்தில் 144 தேயிலை கிராமங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles