“வங்குரோத்து அரசியல்வாதிகளே ‘அரிசி’ கதை கூறுகின்றனர்”

“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“அரச ஊழியர்களுக்குக் கார் வழங்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது கடனுக்கு அரிசி வழங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். அந்த அளவுக்கு அரச ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என எதிரணி உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“அரச ஊழியர்கள் சிலரே இது பற்றிய யோசனையை முன்வைத்திருந்தனர் என அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கமளித்திருந்தார். அரசாங்கம் என்ற வகையில் நாம் அவ்வாறு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

வங்குரோத்தடைந்துள்ள எதிரணியினருக்கு அரசியல் நடத்துவதற்கு வேறு எதுவும் இல்லாததாலேயே, இவ்வாறான போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles