ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஜோஹான் வேட்புல் மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி தனது முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில், இராஜதந்திர ரீதியாக சிக்கல்களைத் தீர்க்க இந்த ஒப்பந்தம் ஒரு நல்ல வாய்ப்பு என்று வேட்புல் கருதுகிறார்.
கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் ஒரு நிலையான தீர்வை எட்டுவதே தற்போதைய முதன்மை நோக்கமாக உள்ளது.
சர்வதேச அளவில் ஹார்முஸ் நீரிணை வழியாக தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் என்று ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.










