இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஈரான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவருக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலைஈரான் வெளிவிவகார அமைச்சர்அமைச்சர் அப்பாஸ் ஆரக்ச்சி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மீறினால் ஈரான் தகுந்த பாடம் புகட்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுஆயுதத் திட்டத்தைத் தடுக்க இஸ்ரேல் உறுதிபூண்டுள்ள நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தரப்பு கூறியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல் போக்கு பிராந்தியத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) “மரணத்திற்காகக் குறிவைக்கப்பட்டுள்ளார்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) கூறிய கருத்து சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
