பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகை

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி, 6ஆவது பாகிஸ்தான் – இலங்கை ஆயுதப் படைகள் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (ஜூலை 01) இலங்கை வந்தடைந்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரையும் அவருடன் வருகை தந்திருந்த பிரதிநிதிக்குழுவினரையும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ஹர்ஷ விதானாராச்சி, மற்றும் இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் வரவேற்றனர்.

6ஆவது பாகிஸ்தான்–இலங்கை ஆயுதப் படைகள் பாதுகாப்புக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (ஜூலை 03) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள கடற்படை தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல், இரு நாடுகளுக்குமிடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், பிராந்திய பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி மற்றும் நீண்டகாலமாக நிலவி வரும் இலங்கை–பாகிஸ்தான் பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வதற்குமான முக்கிய தளமாக அமையும்.

தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles