போதைப்பொருள் பாவனை: பஸ் சாரதி பேராதனை பொலிஸாரால் கைது

மாத்தளையில் இருந்து கொழும்புக்கு பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸென்றின் சாரதி பேராதனைப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு பஸ் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பாவித்திருந்தமை தெரியவந்தது.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பேராதனைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
க.யோகா

Related Articles

Latest Articles