முன்னாள் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

முன்னாள் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட வசந்த கரன்னாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் முறையற்ற கடற்படை நியமனம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரமே அவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொள்வதற்காக, நிறைவேற்று அதிகாரிகளுக்கான நிலையான ஆட்சேர்ப்பு தகைமைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த விசாரணை முக்கியமாக கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன், பிரித்தானிய ராயல் கடற்படைக் கல்லூரியில் (Britannia Royal Naval College) அவர் பயிற்சி பெறுவதற்காக பொதுப்பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையில் அவரது பங்களிப்பு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, ஜூன் 16ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கரன்னாகொடவுக்கு முன்னர் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும்,, தனக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பாணை கிடைக்கவில்லை எனக் கூறி அவர் அன்றைய தினம் முன்னிலையாகவில்லை.

இந்த விசாரணை தொடர்பில் யோஷித ராஜபக்ச ஏற்கனவே ஜூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று தனிநபர் பிணைகளில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles