“சகோதரத்துவக் கிண்ணம்” : பதுளை மத்திய மகா வித்தியாலயம் சாம்பியன்

பதுளை மத்திய மகா வித்தியாலயத்திற்கும், பதுளை தர்மதூத வித்தியாலயத்திற்கும் இடையிலான முதலாவது “சகோதரத்துவக் கிண்ணம்” (Brotherhood Trophy) கிரிக்கெட் போட்டி பதுளை கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பதுளை மத்திய மகா வித்தியாலய அணி அபார வெற்றி பெற்று, முதன்முறையாக நடத்தப்பட்ட சகோதரத்துவக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பதுளை தர்மதூத வித்தியாலய அணி, 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த அணி சார்பில் லிகின் விஹன்ச 51 ஓட்டங்களையும், பியுமித கஜநாயக்க 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பதுளை மத்திய மகா வித்தியாலய அணி சார்பில் விமுக்தி ஹேரத் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நெத்ம திலேஷ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், தரூஷ திஷான் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

146 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பதுளை மத்திய மகா வித்தியாலய அணி, 36.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.

அந்த அணி சார்பில் சனுக மிந்தினு 51 ஓட்டங்களையும், தேஜன சந்தீப் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தர்மதூத வித்தியாலய அணி சார்பில் லிகின் விஹன்ச 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக லிகின் விஹன்சவும், சிறந்த பந்துவீச்சாளராக விமுக்தி ஹேரத்தும், ஆட்டநாயகனாக (Man of the Match) சனுக மிந்தினுவும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுருக்கமான ஓட்ட விபரம்:

பதுளை தர்மதூத வித்தியாலயம்: 145/10 (46.3 ஓவர்கள்)

(லிகின் விஹன்ச – 51, பியுமித கஜநாயக்க – 24, விமுக்தி ஹேரத் – 3/28, நெத்ம திலேஷ் – 2/14, தரூஷ திஷான் – 2/16)

பதுளை மத்திய மகா வித்தியாலயம்: 148/4 (36.2 ஓவர்கள்)

(சனுக மிந்தினு – 51, தேஜன சந்தீப் – 31, லிகின் விஹன்ச – 2/47)

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலகம, ஊவா மாகாண மற்றும் பதுளை மாவட்ட கிரிக்கெட் சங்கங்களின் செயலாளர் பகீரதன் பாலச்சந்திரன், ஊவா மாகாண பாடசாலைகள் கிரிக்கெட் ஒருங்கிணைப்பு அதிகாரி பூஜித பீலிபொத ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், இரு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவ, மாணவியர் மற்றும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்ற சிறப்பித்தனர்.

– த. டிமேஷன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles